டில்லி

பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் தனது ஊழியர்களில் மூன்றில் இருவருக்கு 25%  அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க உள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வங்கி ஊழியர்கள் போன்றோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அதனால் அனைவரும் ஆனலைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடத்தி வருகின்றனர். இதனால் ஐடி ஊழியர்களின் பணி அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  எனவே இந்நாடுகளில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.  இதையொட்டி பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் இவ்விரு நாடுகளில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது.

இந்நாடுகளில் பணி புரியும் மூன்றில் இரு பங்கு ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிவதால் அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில்  25% தொகை கூடுதல் ஊதியமாக அளிக்கப்படும்  என நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த தகவலை இ மெயில் மூலம் தெரிவித்த நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரியான் ஹம்ப்ரீஸ் ஊழியர்களை மிகவும் பாராட்டி உள்ளார்.

ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் ரூ.30000க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு மாதம் இருமுறை ஊதியம் வழங்க உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.