மாஸ்கோ
ரஷ்யாவில் நேற்று இரவு நிலவரப்படி கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இதோ.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் தொடங்கியது. தற்போது சுமார் 180 உலக நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸால் சுமார் 18000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். சீனா திட்டமிட்டே பரப்பிய கொரோனா வைரஸ் தொற்று கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவைப் பாதிக்கவில்லை எனப் பலரும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாம் அங்குள்ள தற்போதைய நிலையைப் பார்ப்போம்.
சீனாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. வைரஸ் பரவுதல் குறித்த செய்திகள் வந்ததுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரஷ்ய அரசு எடுத்தது. ஆயினும் சீனாவில் கடந்த 2 ஆம் தேதி அன்று முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு ஆறாம் தேதி அன்று மேலும் ஆறு பேர் பாதிக்கப்பட்டு அது 7 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பாதிப்பு அதிகமாகி வந்தது.
நேற்றைய இரவு நில்வரப்படிமொத்தம் 658 பேர் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வந்த தகவல்களின் படி இதுவே மிக அதிக எண்ணிக்கை ஆகும்.
இதுவரை மூவர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நேற்று உயிர் இழந்தனர். மரணமடைந்த இருவரும் 73 மற்றும் 88 வயதான முதியவர்கள் ஆவார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாஸ்கோ நகரில் உள்ள நூலகங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், இரவு விடுதிகள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள் முதல் மாஸ்கோவில் உள்ள உணவு விடுதிகள்,காஃபி ஷாப் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
நாட்டில் நடைபெறும் அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 65 வயதுக்கு மேற்பட்ட முதிய ரஷ்ய மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரஷ்யத் தூதரகம் அமெரிக்க அரசு விரவில் அனைத்து விமான நிலையங்களையும் மூடலாம் என்பதால் அங்கு வசிக்கும் ரஷ்ய மக்களை உடனடியாக தாய்நாட்டுக்குத் திரும்ப அறிவுறுத்தி உள்ளது.
பீட்டர்ஸ் பர்கில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான நோயாளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குணம் பெற்றுள்ள கொரோனா நோயாளிகளை விட்டில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்ப்ட்டுளது.
கொரோனா பாதிப்பால் தவிக்கும் மக்களுக்கு உதவ ரஷ்ய ராணுவத்தினரைத் தயாராக இருக்குமாறு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.