சென்னை:

ரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிருங்கள் என்று நுகர்வோருக்கு ஐஓசி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிலிண்டர் இருப்பு உள்ளவர்கள், தேவையில்லாமல் கூடுதலாக சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மக்கள் தேவைக்கு அதிகமாக குவித்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் போல் முன்பதிவு செய்தால் உடனடியாக கிடைக்கும் என எண்ணி, தேவையில்லாமல், சிலிண்டர் முன்பதிவு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொதுமேலாளர் (தென் மண்டலம் ) வெளியிட்டு உள்ளார்.