அயோத்தி:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தியில்  27ஆண்டு களுக்கு பிறகு ராமர்சிலைக்கு இன்று புதிய இடத்தில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில், ராமர்சிலை வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை என  பல்வேறு தடங்கல்களால் பூஜைகள் தடைபட்டு இருந்தது.

அந்த சிலை தற்போது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கோவில் கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள ராம் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, ராம் ஜன்மாபூமி வளாகத்தில் உள்ள மனஸ் பவனுக்கு அருகிலுள்ள ‘ராம் லல்லா’  பகுதியில் சிலையை தற்காலிகக் கட்டடத்திற்கு மாற்றினார். அங்கு பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தப்பட்டது. இந்த விஷேச பூஜையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து, கோயில் கட்டுமானத்திற்காக ரூ .11 லட்சம் காசோலையும் வழங்கினார்.

நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாமியார்கள் அடங்கிய குழு சிறப்பு பூஜை நடத்தியது.