சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது புரசைவாக்கம் இளைஞர் ஒருவர் தற்போது ராஜிவ காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய ஒருவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும், மதுரையைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய ஒருவர் ராஜாஜி மருத்துவமனையிலும் தனிமையில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டு உள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. ஆனாலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு செல்லாத ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முறையாக பாதிப்பு  ஏற்பட்டுள்ளது, கவனிக்கத்தக்கது.

[youtube-feed feed=1]