வாஷிங்டன்

மெரிக்க செனட் உறுப்பினர் ராண்ட் பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 34000 பேர் பாதிக்கப்பட்டுளதாகவும் 34 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளன.  இதனால் பெரும்பாலானோர் வீட்டினுள்ளேயே முடங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினரான ராண்ட் பால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானது தற்போது தெரிய வந்துள்ளது.  அவர் சமீபத்தில் பல இடங்களுக்கு பயணம் சென்று வந்துள்ளார்.  அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  அதையொட்டி அவருக்குச் சோதனைகள் நடந்தன.

சோதனையில் ராண்ட் பால் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   அவர் தற்போது உடல் நலத்துடன் உள்ளதாகவும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.  தனக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவில்லை என அவர் கூறி உள்ளார்.

 

 

[youtube-feed feed=1]