சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 2,09,035 பேருக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் 12,519 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதுவரை 9266 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உளளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதுமட்டுமிறி, 552 பேருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதில் 503 பேருக்கு நெகடிவ் என்றும், 9 பேருக்கு பாசிட்டிவ் என்றும், இதில் ஒருவர் நோய் குணமடைந்துவீடு திரும்பி உள்ளதாகவும் மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 40 பேரின் ரத்த சோதனை மாதிரி நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றவர், 8 இடங்களில் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று சூழ்நிலையை சமாளிக்கும் அளவுக்கு நாம் எல்லாவற்றையும் தயார்படுத்தி உள்ளதாகவும், 1½ லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தயாராக இருக்கின்றன. 1690 சுவாச கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. இன்னும் 1000 கருவிகள் வாங்கப்பட இருக்கிறது. இவை, அடுத்த வாரத்தில் வந்துவிடும் என்றவர், 40 லட்சம் மூன்றடுக்கு முக கவசம், 2 லட்சம் ‘எண் 95’ முக கவசம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர், புதிதாக 500 டாக்டர்கள், 1000 நர்சுகள், 1500 ஆய்வுகூட தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 3-வது டவர் முழுவதும் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், அங்கு தற்போது 4250 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு கிறார்கள், மேலும் அங்கு நோயாளிகளின் படுக்கை 5800 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.