நியூயார்க்: உலக நாடுகளின் தண்டனை நடைமுறைகளிலிருந்து தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டுமென ஐ.நா. சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; தூக்கு தண்டனை என்று வருகையில், ஐக்கிய நாடுகள் அவையின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றம் ஏற்படாது. தூக்கு தண்டனை என்பது அனைத்து நாடுகளாலும் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இல்லையெனில், தற்காலிக தடையாவது விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸினுடைய செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜூராயிக் வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேர், டெல்லியில் தூக்கிலிடப்பட்ட சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.