டெல்லி:
பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது.

58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின் உடல் நிலை குறித்த தகவல்கள் அவரது இன்ஸ்டகிராம் பதிவில் வெளியிடப்பட்டது. டோனி விருது வென்ற பான் ஜோவியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது நாளுக்கு நாள் அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதே போன்று லக்னோவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் ஒருவர் இதை கனிகா கபூர் தன்னுடைய சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தார். மார்ச் மாதம் கனிகா லண்டனில் இருந்து இந்தியா வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என அவர் கூறினார்.
[youtube-feed feed=1]