சிதம்பரம்
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி இதுவரை 12,966 பேரை பலிவாங்கி இருக்கிறது, இத்தாலியில் மட்டுமே 4825 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் பல்வேறு தடைகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துவரும் அதேவேளையில், வைரஸோ தன் கோரத்தாண்டவத்தை எப்பொழுதான் நிறுத்துமோ என்று உலகமக்கள் பீதியுடன் வேண்டிநிற்கிறார்கள்.
தமிழகத்திலும், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் அதிகம் வரக்கூடிய பல்வேறு முக்கிய கோயில்களை மூடிய நிலையில், ஆகம விதிகள் படி நடக்கவேண்டிய பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
இதனை தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் மக்கள் வருகைக்கு மூடப்பட்டது. அங்கு ஆறுகால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பொற்சபையில் ஆனந்த நடனமாடும் நடராஜனை வேண்டிய தீட்சிதர்கள், அனைத்தும் அவனருளால் நலம்பெறவேண்டும் என்று பூஜை செய்யும் வீடியோ காட்சி.
நன்றி : சித்தர்கள்