ஏதென்ஸ்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஏதென்ஸில் இருந்து புறப்பட்டது ஒலிம்பிக் ஜோதி!

ஜுலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் உலகையே படுத்தி எடுத்துவரும் நிலையில், ஒலிம்பிக் தொடர் நடக்குமா? என்ற கேள்வியும் வலுவாக இருந்துவரும் நிலையில், ஜோதி ஓட்டம் தொடங்கி நடைபெற்றது.

கடந்த வாரமே, ஏதென்ஸ் முழுவதும் ஒலிம்பிக் ஜோதி வலம்வந்தது. தற்போது, அந்த ஜோதி, முறைப்படி ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெறுவதற்காக ஜப்பானிலிருந்து தனி விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த ஜோதி ஒப்படைப்பு விழா நடைபெற்ற பனெதனாயிக் என்ற பெயருடைய குதிரைக் குளம்பு வடிவமுடைய மைதானத்தில், பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது 50000 பேர் அமரக்கூடிய பிரமாண்ட மைதானமாகும்.

கிரீஸ் நாட்டு ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சைப்ரஸ், ஒலிம்பிக் ஜோதியை ஜப்பானின் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டோ நவோகாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், மார்ச் 26ம் தேதி ஜப்பானில் ஜோதி ஓட்டம் தொடங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.