மும்பை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 49ஐ எட்டி உள்ளதால், மும்பை உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் உள்ள ஏசி உள்ளூர் ரயில் சேவைகளை இன்று முதல் ரத்து செய்ய முடிவு செய்தது.

தானே முதல் ஹார்பர் வரை உள்ள ஏசி உள்ளூர் ரயில் சேவைகள் மார்ச் இறுதி வரை நிறுத்தப்படும் என்று மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம். தயவு செய்து முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும். எல்லா நேரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்  என்று தாக்கரே கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31 வரை 150 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட இந்த ரயில்களுக்கு ரயில் பயணிகள் 100% பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.