டெல்லி :
இன்று முதல் மார்ச் 31 வரை நடக்க இருந்த சி பி எஸ் சி போர்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சி பி எஸ் சி பள்ளிகளில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த தேர்வுகள், மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
நேற்றிரவு இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம், 19-மார்ச்-2020 தொடங்கி 31-மார்ச்-2020 வரை நடக்க இருந்த அனைத்து சிபிஎஸ்இ தேர்வுகளையும் தள்ளிவைப்பதாக கூறியிருக்கிறது.
இதேபோன்று, JEE முதன்மைத் தேர்வை மறுபரிசீலனை செய்ய மத்திய மனித வள மேம்பட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தள்ளிவைக்கப்பட்டுள்ள இந்த தேர்வுகள் மீண்டும் எப்பொழுது நடைபெறும் என்பதை பின்னர் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறது தேர்வாணையம்.