டில்லி

ன்கு படித்த பலரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடக்கி உள்ளது.  இத்தாலி,  அமெரிக்கா போன்ற நாடுகளில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இதற்காக இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படுவதால் விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.   இதற்கு ஒத்துழைப்பு அளிப்பதற்குப் பதில் ஒரு சில நன்கு படித்தவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது தவறு என நெட்டிசன்கள் வீடியோவுடன் பதிந்து வருகின்றனர்.

இது குறித்து ஒரு பதிவில், “நன்கு படித்த மேல் தட்டு மக்கள் விமான நிலைய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சோகத்தை அளிக்கிறது.  டில்லி விமான நிலைய சுகாதார அதிகாரி,  மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் அருமையான பணிகளைச் செய்து வருகின்றனர்.  அவர்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்” எனப் பதிந்துள்ளனர்.

இதோ நமது வாசகர்களுக்காக விமான நிலைய வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=7gJCoyndvI0]