முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம்.
கந்த சஷ்டி கவசத்தின் சிறப்புக்கள்

இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை முருகன் கோயிலில் திருப்பணி செய்வதற்காக நியமித்த தேவராய சுவாமிகள் இதைப் பாடினார்.
‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இக்கவசம் பயம் போக்கும் மந்திர நூல். இதை நெஞ்சில் பதிய வைப்போருக்குப் பாவம், துன்பம் நீங்கி செல்வம் பெருகும்.
தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பதன் பலன்.
வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.
லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும்.
கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்குப் புகழ், மதிப்பு கூடும்.
முக வசீகரம் ஏற்படும்.
செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியைப் படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று சஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.
கந்த சஷ்டி கவசம் என்பது சாதாரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.
முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் சஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்.
[youtube-feed feed=1]