டெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா அறிகுறி என்று தகவல் வெளியாகி உள்ளது. முதன்முதலாக மத்திய அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மத்திய அமைச்சரவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வருபவர் முரளிதரன். கேரளாவைச் சேர்ந்தவரான இவர், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.
இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு கொரோனா தொற்று இருக்கலாமோ என்ற அச்சத்தில் அமைச்சர் மருத்துவர் ஒருவரிடம் கொடுத்த ரத்த பரிசோதனையில், அது பாசிடிவ் என தெரிய வர, அவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மற்றொரு ஆய்வுகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவு எதிர்மறையாக வந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், உண்மையை மறைத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊடகத்துறையைச் சேர்ந்த மூத்தி செய்தியாளர்கள், மத்திய அமைச்ச்ர முரளிதரன் குறித்து விசாரித்த பிறகே, இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது.