சீரடி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்ற டிசம்பர் மாதம் சினாவின் வுகான் நகரில் கொரோனா வைராஸ் தொற்று கண்டறியப்பட்டது.   அது சீனா முழுவதும் பரவியதோடு அல்லாமல் சுமார் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.  இந்த வைரஸ் இந்தியாவிலும்  பரவி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கோரோனாவை கொள்ளை நோய் என அறிவித்துள்ள உலக சுகாதார மையம் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.   அதன்படி கை குலுக்குதல், கட்டித் தழுவுதல் அதிக கூட்டம் உள்ள இடத்துக்குச் செல்லுதல் , மற்றும் ஒரே இடத்தில் பல மக்கள் சேருதல் ஆகியவற்றை தவிர்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்குத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.  விடுமுறைக் காலங்களில் லட்சம் பேருக்கு மேல் கோவிலுக்கு வருவார்லள்  எனவே கூட்டத்தைத் தவிர்க்க சில நாட்களுக்குப் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.