டெல்லி:
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதுடெல்லியில் கொரோனா பாதிப்புக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட முதல் நபரான ராம் மனோகர் லோஹியா தற்போது முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மருத்துவமனையில் சிகிசை பெற்று வந்த லோஹியா குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
இவர் இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இந்தியா திரும்பினார். இந்தியாவில் உள்ள ஹையாட் ஹோட்டலில் ஏராளமான நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தான் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லோஹியா கடந்த மார்ச் 2-ஆம் தேதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து வைரஸ் சோதனையை தீவிரபடுத்திய அதிகாரிகள், லோஹியாவுடன் தொடர்பு கொண்ட 105 நபர்களை சோதனை செய்தனர். அவர்களில் 41 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் தேசிய தலைநகருக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தெரிய வந்தது.
இதற்கிடையில், டெல்லியின் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபரான லோஹியா முழுமையாக குணமடைந்து விட்டார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 80 சதவீத நோயாளிகள் முதியவர்கள் என்பதுடன், அவர்களுக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவை உள்ளதால், இவர்கள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.