போபால்: ஆளுங்கட்சியின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு, மத்தியப் பிரதேச சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே, திடீர் திருப்பமாக மற்றொரு காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் அரசுக்கு எதிராக திரும்பினர்.

அவர்கள் அனைவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதி உத்தரவிட்டார். இதையடுத்து 22 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆஜராகினர்.

இந்த சூழ்நிலையில் நாளை (மார்ச் 16) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதிக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.