வாஷிங்டன்:

மெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரண மசோதா குறித்து பேசினார். தேவைப்படும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய டிரம்ப், மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறோம் என்றார். இது சீனாவில் இருந்து தொடங்கினாலும், இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு அங்கு பலியாோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. 82 வயது மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.