டெல்லி:

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா கொரோனா வைரஸ் இந்தியர்களை ஒன்றும் செய்யாது என்று கூறி உள்ளார். இதற்கு காரணமாக அவர் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது…

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆக கூடியுள்ளது.  இதைத்தொடர்ந்து, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும், விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்,.பாஜக தேசிய பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கைலாஷ் விஜய் வர்கியா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது…

கொரோனா நம் நாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் 33 கோடி தெய்வங்கள் நம் நாட்டில் வாழ்கின்றன… அவைகள் மக்களை பாதுகாத்துக்கொள்ளும் என்று கூறி உள்ளார்…

பாஜக எம்.பி.யின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது…