ஜெய்ப்பூர்:

ந்தியாவில் தீவிரம் காட்டி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட மக்கள் கூடும் இடங்களுக்கு விடுமுறை விடப்பட்ட உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும்,  பள்ளி, கல்லூரி மால்கள், சினிமா அரங்குகள், விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அங்கிருந்து விலகி, உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 17 வெளிநாட்டினர் உள்பட  89 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.

மத்திய, மாநில அரசுக்கள் இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழகம் உள்பட  பல மாநிலங்கள் மக்கள் கூட தடை விதித்துள்ளதுடன், பள்ளி கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்களை இந்த மாதம் இறுதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலமும், பள்ளி கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், மால்களை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த மாதம் 31ந்தேதி வரை மக்கள் கூடுவதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.