பெங்களூரு:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள், மால்கள் உள்பட பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில், சுகாதாரத் துறை ஊழியா்களுகுவிடுமுறை எதுவும் அளிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்து உள்ளது. மேலும், விடுமுறையில் இருந்தவர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பின் முதல்பலி கர்நாடகாவில் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இன்றுமுதல் (14ந்தேதி) கா்நாடகத்தில் பொதுநிகழ்வுகள் அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாா்ச் 14ஆம் தேதி முதல் விடுமுறைகள் ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் நோயின் பாதிப்புகள் பரவாமல் தடுக்க அவசரகாலத்தை போல பணியாற்ற வேண்டியிருப்பதால் சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்ட முழுவீச்சில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுகாதாரத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், அலுவலக ஊழியா்கள், மருத்துவம்சாா் ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் . நிலைமை சீரடையும் வரை , விடுமுறை எடுக்காமல், அனைத்து பொதுவிடுமுறை நாள்களிலும் வேலைசெய்ய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.