ஸ்ரீநகர்:
எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி என்று முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா நன்றி தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்னாள் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். படிப்படியாக பலர் விடுக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை மாநில முதன்மை செய்லாளர் விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தடுப்பு காவலில் இருந்து வெளியே வந்த பரூக் அப்துல்லா, எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி, இருந்தாலும், : “அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும்போது இந்த சுதந்திரம் முழுமையடையும். அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்பட சிலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.