கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் அபிராமி அம்மன்

கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் அபிராமி அம்மன் பற்றிய பதிவு

கர்ப்பிணிப் பெண்கள் அபிராமபுரம் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆவதாகப் பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு. இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயா் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘அபிராமி அம்பிகை.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று கூறப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்குச் சுகப் பிரசவம் ஆவதாகப் பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் – பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் பந்தநல்லூருக்குக் கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபிராமபுரம் என்ற இந்த தலம்.