டில்லி

கொரோனா வைரஸ் நோய் குறித்து சிறுவர்-சிறுமிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு ‘காமிக்’ கதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘kids,vaayu & corono: who wins the fights’’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த காமிக் புத்தகத்தைப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் எழுதியுள்ளனர்.

கதை எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா?

தொலைக்காட்சியில் குழந்தைகள் கொரோனா நோய் குறித்து செய்தி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் தந்தையிடம் அந்த குழந்தைகள்’’ கொரோனா என்றால் என்ன?’’ என்று வினவ-

அவரோ, ’’இன்று சாயங்காலம் விளக்கமாகச் சொல்கிறேன்’ என்று கூறி விட்டு வெளியே கிளம்பிச் செல்கிறார்.

குழந்தைகளுக்கோ கொரோனா பற்றி உடனடியாக தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருக்கிறது.

சூப்பர் ஹீரோவான வாயுவை அழைக்கிறார்கள் , அந்த குழந்தைகள்.

வாயு வருகிறார்.

;என்ன விஷயம் குழந்தைகளே.? ஏன் அழைத்தீர்கள்?’’ என்று கேட்க-.

அவர்கள் கொரோனா குறித்து சந்தேகம் கேட்கிறார்கள்.

வாயு விளக்குகிறார்.

எப்படி?

கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து விவரிக்கிறார், சூப்பர் ஹீரோ வாயு.

கொரோனாவை எப்படித் தவிர்க்கலாம் என்றும் விளக்கம் தருகிறார்.

‘’ நண்பர்களை சந்திக்கும் போது கை குலுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக அஸ்ஸலாமு அலைக்கும்,நமஸ்தே,ஹலோ அல்லது சத்ஸ்ரீ அகால்ஜி சொல்லி வரவேற்கலாம்’’ என்று ;அட்வைஸ்’ கூறிவிட்டு, சூப்பர் ஹீரோ வாயு பறப்பது போல் கதை முடிகிறது.