காரடையான் நோன்பு அடை செய்யும் முறை
நாளை 14/03/2020 அன்று காரடையான் நோன்பு செய்யும் பெண்களுக்கான சமையல் குறிப்பு
பெண்கள் காரடையான் நோன்புக்குப் படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள்.
நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்துச் சாப்பிடச் சத்தான சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாகக் கீரியது – அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
அடை செய்முறை:
காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும். வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணெய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
இதை நோன்பு அன்று அவசியம் செய்து அம்மனுக்கு படைக்கவேண்டும்