டெல்லி: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் கேடிஎஸ் துல்சி, புலே தேவி நேதம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஷசாதா அன்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் திக் விஜய் சிங், பூல் சிங் பரியா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ராஜிவ் சடவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் கென்னடி கொர்னிலியஸ் கேஹியம் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கே.சி. வேணுகோபால், நீரஜ் டாங்கி ஆகிய இருவரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ஷக்திசின்ங் கோஹில், பாரத்சின்ங் சோலங்கி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்க உள்ளனர். அரியானாவில் தீபந்தர் சிங் ஹூடா போட்டியிடுவார் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.