புதுச்சேரி

புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.   ஆனால் இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.  இதுவரை 4627 பேர் இந்த வைரசுக்குப் பலியாகி உள்ளனர்.  அத்துடன் 1.27 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   இதில் சீனாவில் மட்டும் 80,769 பேர் பாதிக்கப்பட்டு 3169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இவ்வகையில் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில் 17 பேர் வெளிநாட்டினர் என்பதும் தெரியவந்துள்ளது.  இதில் மகாராஷ்டிராவில் 11, கேரளா 17, உத்தரப்பிரதேசம் 10, டில்லி 6, கர்நாடகா 4 ,  லடாக் 3, ராஜஸ்தான் 1, தெலுங்கானா 1, தமிழ்நாடு 1, ஜம்மு காஷ்மீர் 1 பஞ்சாப் 1 என பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை.  அங்கு 3 பேருக்குப் அறிகுறிகள் உள்ளதால் அவர்களின் இரத்த மாதிரிகள் அதை உறுதிப்படுத்த புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இன்னும் மூன்று நாட்களில் அது உறுதிப்படுத்தப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.  இந்த தகவலால் புதுச்சேரி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.