டெல்லி:

டை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவும், தயாரிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜுன் கோபால் என்பவர்  தொடர்ந்த வழக்கில் கடந்த விசாரணையைத் தொடர்ந்து,  தமிழகத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐ இணை இயக்குநருக்கு (சென்னை) உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுப்பையன் மற்றும் சுந்தரவேல் தலைமையில் 14 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஆய்வு செய்த் சிபிஐ குழுவினர், அங்கிருந்த பட்டாசு மற்றும் மூலப்பொருட்கள், ரசாயனங்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்த ரசாயனங்கள்  அனைத்தும்  மத்திய ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.