டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சத்துக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 4025 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை மட்டுமல்லாது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இன்றைய காலை நிலவரப்படி 47 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். பெங்களூரில் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அங்கன்வாடி பள்ளிகள், ஆரம்ப பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது.
கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதனால் அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,116 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
வைரஸ் வேகமாக பரவிவருவதால் கேரளாவில் மார்ச் மாதம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் 12 பேருக்கு கேரளாவில், கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட 270 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தொண்ணூற்று ஐந்து பேர் அதிக ஆபத்து உள்ளவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,116 பேர் கண்காணிப்பில் உள்ளனர், 976 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர், 149 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்தார்.
[youtube-feed feed=1]