நியூயார்க்

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகச் சர்வதேச பங்குச் சந்தையில் கடும் சரிவு  எற்பட்டுள்ள்து.

இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் காரணமாகச் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் முழுவதுமாக நின்று போனதாகும்.

அமெரிக்க பங்குச் சந்தையில் பல பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை  வெகுவாக குறைந்து வருகின்றன.

இன்று காலையில் இருந்தே கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்தது.

அதன் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தை இன்று ஆரம்பத்திலேயே 1400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் ஆரம்பித்தது.

அந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்து 2000 புள்ளிகளை எட்டியுள்ளது..