டில்லி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வ்ங்கதேச் அரசு விடுத்த அழைப்பை ரத்து செய்ய பாஜக அரசு முயன்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை அடைந்தது. அந்நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 50 அண்டுகளுக்கு முன்பு அந்நாடு விடுதலை பெற இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு மிகவும் உதவி செய்தது. விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்திய ஷேக் முஜிபுர் ரகுமான் அதற்காக இந்திரா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வங்க தேச பிரதமராக உள்ள ஷேக் ஹசீனா மறைந்த ஷேக் முஜிபுர் ரகுமான் மகள் ஆவார். இந்திரா மற்றும் முஜிபுர் குடும்பத்துக்கு இடையே இன்னும் ஆழமான நட்பு உள்ளது. கடந்த வருடம் இந்தியா வந்திருந்த ஷேக் ஹசினா சோனியா காந்தியைச் சந்தித்து அவருக்கு வங்க தேச சுதந்திர விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். அதைச் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் ஷேக் ஹசீனா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வங்க தேச அரசு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்ததை பாஜக அரசு விரும்பவில்லை எனக் கூறப்ப்டுகிர்து. எனவே இந்த அழைப்பை ரத்து செய்ய மத்திய அரசு அதிகாரிகள் பெரிதும் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் டாக்காவில் மறைந்த ஷேக் முஜிபுர் ரகிமான் பிறந்த தின விழாவில் கலந்துக் கொள்ளச் செல்ல உள்ளார். இந்த விழாவுக்குப் பிரதமர் வருவது குறித்துப் பேச இந்திய வெளியுறவுச் செயலர் ஹ்ர்ஷ் வர்தன் சிரிங்கலா வங்கதேசம் சென்றுள்ளார். அப்போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா டாக்கா வலியுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கனவே அதிகாரிகள் நிலையில் இது குறித்து வற்புறுத்தப்பட்டதாகவும் அப்போது சிரிங்கலா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச அதிகாரிகள் இந்த அழைப்பைப் பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்துள்ளதால் அதை தங்களால் ரத்து செய்ய முடியாது என தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின் போது வங்க தேசத்தில் மோடிக்கு அரசியல் ரீதியாக மக்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வங்க தேச அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.