அபுதாபி: கொரோனா பீதியால் இந்தியா மற்றும் இதர 6 நாடுகளுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளது குவைத் அரசாங்கம்.
வளைகுடாப் பகுதியில் அமைந்த மன்னராட்சிக்கு உட்பட்ட ஒரு குட்டி தேசம்தான் குவைத். தற்போது, கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றை ஆட்டிப்படைத்து வருகிறது.
எனவே, இந்தியா மற்றும் இதர 6 நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் குவைத்திலிருந்து அந்நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
குவைத் நாட்டின் உள்நாட்டு நிர்வாகத்துறை இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இலங்கை, எகிப்து, சிரியா மற்றும் லெபனான் ஆகியவைதான் அந்த 7 நாடுகள். இந்தத் தடை 1 வாரத்திற்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற போக்குவரத்து தொடர்பான தடைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.