
ஸ்ரீகாந்த் என்.ரெட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘அஹம் பிரம்மாஸ்மி’. இப்படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 6) காலை ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராம்சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்தப் படத்தில் மஞ்சு மனோஜுக்கு நாயகியாக நடிக்கவுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இந்தப் படத்தை மஞ்சு மனோ மற்றும் நிர்மலா தேவி இணைந்து தயாரிக்கிறார்கள்.

தனிகேல்லா பரணி, முரளி கிருஷ்ணா, சமுத்திரகனி, ரகு பாபு, ராஜிவ் கனகலா, சுதர்ஷன் ராம் பிரசாத், சிண்டு பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சன்னி குருபாதி, இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
[youtube-feed feed=1]