ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனை யில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு இத்தாலி நாட்டிலிருந்து 23பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், இத்தாலி சுற்றுலாப் பயணிகளான தம்பதி கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட இந்த இத்தாலி தம்பதி, சவாய் மான் சிங் அவரது மனைவி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள மாநில மருத்துவ மற்றும் சுகாதார கூடுதல் தலைமை செயலாளர் ரோஹித் குமார் சிங் , இத்தாலிய தம்பதியினரைத் தவிர, ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சந்தேகிக்கப்படும் நபர்கள் சுமார் 282 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், இவர்களில் 280 பேருக்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும், இத்தாலி தம்பதியினருக்கு மட்டும் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.