ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31ந்தேதிவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு விலக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ளது. இதுவரை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த இருவரும் இத்தாலி மற்றும் தென் கொரியாவிற்கு சென்று வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசிறிது நேரத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் சில மண நேரத்திற்குள் அவர்கள் பிடிக்கப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்.ஐ.வி) அனுப்பப்பட்டு உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
மேலும், அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் தேர்வுகள் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 31 ஆம் தேதி வரை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பயோமெட்ரிக் வருகைகளையும் உடனடியாக நிறுத்துவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஜம்மு-காஷ்மீர் எச்சரிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ள மாநில அரசு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களுக்கும் சோதனை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.