எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபட வேண்டும்?
27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் பற்றிய பதிவு :-
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வழிபடுவதற்கு சிவபெருமானின் ரூபங்கள் உள்ளன. எந்த நட்சத்திரக்காரர்கள், எந்த ரூபத்தில் உள்ள ஈசனை வழிபட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
1. அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்
2. பரணி – சக்தியுடன் கூடிய சிவன்
3. கிருத்திகை – தனியாக இருக்கும் சிவன்
4. ரோகிணி – பிறை சூடியப் பெருமான்
5. மிருகசீரிஷம் – முருகனுடன் கூடிய சிவன்
6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
8. பூசம் – நஞ்சுண்ணும் ஈசன்
9. ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவன்
10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்
11. பூரம் – அர்த்தநாரீஸ்வரர்
12. உத்திரம் – தில்லை நடராஜ பெருமான்
13. ஹஸ்தம் – தியான கோல சிவன்
14. சித்திரை – நந்தி தரிசித்தபடி இருக்கும் பார்வதியுடன் கூடிய சிவன்
15. சுவாதி – சகஸ்ரலிங்கம்
16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்
17. அனுஷம் – ராமர் வழிபட்ட சிவன்
18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்
19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
20. பூராடம் – சிவ சக்தி கணபதி
21. உத்திராடம் – ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தைக் காணும் சிவன்
22. திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசீர்வதிக்கும் சிவன்
23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவன்
24. சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்
25. பூரட்டாதி – விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் இணைத்து காட்சி தரும் சிவன்
26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்
அவரவர்களுக்குரிய சர்வேஸ்வர ஸ்வரூபியை வழிபட்டுப் பயனடையுங்கள்.