பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் , நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ள படம் திரௌபதி .
தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் முதல் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்குகிறார் .
இப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 ஆம் தேதியன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலானது .
படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும் . தமிழகத்தில் திரௌபதி வழிபாடு வன்னியர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது.
திரௌபதிக்கு கோயில் கட்டி தெய்வமாக வழிபடும் பழக்கம் அவர்களிடையே உருவானது தான் .
மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி டிரைலர் மூலமாக கர்ஜித்துள்ளார் .
சாதி வெறி உறுதிபடுத்தும் விதமாக சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி எனவும் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டது படக்குழு.
ட்ரெய்லர் மூலமாக பெரும் விவாதத்தை உண்டாக்கிய இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது.
படத்தைத் தணிக்கை செய்து, பிப்ரவரி 28-ம் தேதி வெளியிட்டது படக்குழு. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்கள். பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, இந்தப் படத்தை மிகவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
முதல் நாளே தமிழக திரையரங்க வசூல் 2 கோடிக்கு நிகராக கிடைத்துள்ளது. இதில் விநியோகஸ்தர்கள் பங்கு, திரையரங்குகள் பங்கு என கழித்து, ஷேர் தொகையாக மட்டும் 85 லட்ச ரூபாய் வரை கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த பொருட்செலவே 1 கோடி ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள்.
முதல் நாள் வசூலே 85 லட்ச ரூபாய் வந்துவிட்டதால், இந்தப் படம் கண்டிப்பாகத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள்.
மூன்று நாள் வசூல் 6.5 கோடி ருபாய் என் தகவல் வெளியாகியுள்ளது .