சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது,  வன்முறை ஏற்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்லாமியர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு, அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய பெருமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு,போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்/

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.