மணிலா: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
காலிறுதிப்போட்டியில், தாய்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்துவரும் ஆசிய அளவிலான அணிகளுக்கான பாட்மின்டன் போட்டிகள் நடக்கின்றன. தாய்லாந்துடன் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் தோற்றாலும், லக்சயா சென் வென்றார்.
இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் அர்ஜுன், துருவ் கபிலா, ஸ்ரீகாந்த், ஷிராக் ஷெட்டி ஆகியோர் சிற்பபாக செயல்பட்டு தாய்லாந்தை வீழ்த்தினர்.
முடிவில், 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதியில் நுழைந்தது. அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவை சந்திக்கிறது இந்திய அணி.