சென்னை:
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு, அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதில், அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன். இவற்றுகாக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிடத்தக்க ஏரிகள் மீட்டெடுக்கப்படும்.
4,825 பணிகள், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கிழ் 902.35 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளத.
.மீன்வளத்துறை:
மீனவளர்களுக்கான தடைக்கால உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கு 298.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் இஸ்ரோ அறிவித்த ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். 4997 படகுகளில் 18 கோடி ரூபாய் செலவில் இந்த ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். ஏற்கனவே 597 ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த துறைக்கு 1229.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
கால்நடைத்துறை:
விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், கோழி வழங்கும் திட்டம், தீவன அபிவிருத்தி திட்டம் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன.
நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் விவசாயிகளின் இடத்திலேயே கால்நடை மருத்துவ சேவையை அரசு வழங்கும்.,
சேலம் தலைவாசலில், கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு மாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதே திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு விவரம்…