மெல்போர்ன்: முத்தரப்பு பெண்கள் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது இந்தியப் பெண்கள் அணி. இதன்மூலம் ரசிகர்களின் கோப்பைக் கனவு தகர்ந்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து நாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மூனே அதிகபட்சமாக 71 ரன்களை அடித்தார்.
பின்னர், கோப்பையை வெல்ல 167 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் நன்றாகவே விளையாடியது. மந்தனா 66 ரன்களை விளாசினார். ஆனால், ஆட்டத்தின் பின்பாதியில், இந்திய அணியின் நிலைமை மோசமானது.
115/3 என்ற நிலையிலிருந்து இந்திய அணி, 127/8 என்ற நிலைக்கு வந்தது. பின்னர். 144 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 11 ரன்களில் கோப்பையை நழுவவிட்டது.