டெல்லி:

ம்ஆத்மி வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள  ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மகளிரணி தலைவி  ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ப.சிதம்பரமும், ஆம்ஆத்மி கட்சி வெற்றிக்காக டெல்லி மக்களுக்கு செல்யூட் அடிப்பதாக டிவிட் போட்டிருந்தார். டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும்  டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில்,  ப. சிதம்பரத்தின் டிவிட்டால் கொதித்து போன  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி காட்டகமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி தேர்தலில் ஒரு இடங்களை பிடிக்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ள நிலையில், சிதம்பத்துக்கு கேள்வி எழுப்பும் வகையில்,

ப சிதம்பரம் சார் உரிய மரியாதையுடன் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.

பாஜகவை தோற்கடித்த மாநில கட்சிகளுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் அவுட்சோர்ஸிங் வேலை ஏதாச்சும் பார்த்ததா?

 அப்படி இல்லையென்றால், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?

மாநில கட்சிகளை பார்த்துக்கொள்ளும் என்றால் நம்முடைய மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தங்களுடைய கடையை இழுத்து மூடி விடலாம்… 

இவ்வாறு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பிரச்சினை காங்கிரஸ் கட்சிக்குள் அனல்பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கடந்த  2013ம் ஆண்டு டெல்லி முதல்வராக  ஷீலா தீட்சித்  இருந்தபோதே காங்கிரஸ் கட்சி சரிவு தொடங்கிவிட்டதாக பி.சி.சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

புதியதாக உருவான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசின் மொத்த வாக்கு வங்கியையும் கைப்பற்றிவிட்டதாக தெரிவித்து உள்ள சாக்கோ,  ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிய காங்கிரசின் வாக்கு வங்கியை இன்னும் மீட்க முடியவில்லை என  கூறி உள்ளார்.