திருவனந்தபுரம்:

கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஆனால்,  தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்தப்படாது, இதில் மாநில அரசு தெளிவாக உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தி உள்ளார்.

கேரள மாநிலத்தில் தற்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், கேரளத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தான் நடத்தப்படும். ஆனால், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு செயல்படுத்தப்படாது. இது தொடர்பாக பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,  இந்த விஷயத்தில் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று கூறினார்,.

மத்தியஅரசு அறிவித்துள்ள  தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான விண்ணப்ப படிவத்தில் கேள்விகள் வேறு மாதிரி இருப்பதால் அவற்றைத் தவிர்த்து மக்கள் தொகை கணக்கெடுப்பை கேரள அரசு நடத்தும் என்று கூறியவர், அதற்கு தகுந்த வகையில் விண்ணப்ப படிவத்த்தில்  கேள்விகள்  வடிவமைக்கப்படும்  என்றும் விளக்கம் அளித்தார்.