பிள்ளையார் வழிபாடும் பலன்களும்
பிள்ளையார் வழிபாடு பற்றி சில குறிப்புகள்.
எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவ ரீதியான, திடமான நம்பிக்கை.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் மட்டுமே இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஆனால் விநாயகரை மட்டும் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்னங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் வடிவமைத்து வழிபடலாம்.
இவ்வாறு நமக்கு தேவைக்கேற்றபடி பல விதமான பொருட்களால் பிள்ளையாரை ஆவாகனம் செய்து வழிபட்டால் கிடைக்கும் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் பிள்ளையார் – சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
குங்குமப் பிள்ளையார் – செவ்வாய் தோஷம் நீங்கும்.
புற்று மண் பிள்ளையார் – விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.
வெல்லப் பிள்ளையார் – உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.
கடல் உப்புப் பிள்ளையார் – எதிரிகள் தொல்லை நீங்கும்.
வெள்ளெருக்குப் பிள்ளையார் – பில்லி, சூனியம் விலகி வாழ்வில் வளமும் நலமும் சேரும்.
விபூதிப் பிள்ளையார் – நோய்கள் நீங்கும்.
சக்கரைப் பிள்ளையார் – சக்கரை நோய் நீங்கும்.
பசுஞ்சாணப் பிள்ளையார் – சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாகச் சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.
சந்தனப் பிள்ளையார் – புத்திர பாக்கியம் உண்டாகும்.
வாழைப்பழப் பிள்ளையார் – குடும்பம் விருத்தியாகும்.
வெண்ணெய் பிள்ளையார் – வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்.
ஓம் விக்நேஷ்வராய நமஹ