சென்னை:
தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கைது எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாயம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ள வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரூப்4 தேர்வு முறைகேடு மட்டுமின்றி, குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி இயக்குனர் ஜாபர்சேட் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில்முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்த நிலையில்,கடந்த இரு நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும், ஜெயக்குமார், சித்தாண்டி, ஓம் காந்தன் ஆகியோரிடமும் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையைம் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கைது எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், ரூபாய் 4 கோடிக்கு 23 அரசு பணிகளை விற்பனை செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
[youtube-feed feed=1]