சேலம்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கிரிக்கெட் மைதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், முதல்வர் காரைக் கண்டதும், தங்களது கைகளை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதைக்கண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உடனே காரை நிறுத்த டிரைவரை அறிவுறுத்தியதுடன், அந்த சிறுவர்களை அருகேஅழைத்து, கைநிறைய சாக்லெட்டை அள்ளிக் கொடுத்தார். சாக்கெலெட்டை பெற்றுக்கொண்ட சிறுவர்கள், மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வானது, நேற்று சேலம் அருகே வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கச் சென்றபோது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது‘