சென்னை:

மிழகத்தில் முதல்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி நகராட்சிகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தவில்லை என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் உச்சநீதி மன்றம் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2019) டிசம்பர் இறுதியில் முதல்கட்டமாக ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி பாப்டே, இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.