லண்டன்: சீனத்து வங்கிகளிடம் வாங்கிய கடன்களுக்கான டிபாசிட் தொகையாக ரூ.715 கோடியை அடுத்த 6 வாரங்களுக்குள் செலுத்த வேண்டுமென அனில் அம்பானிக்கு உத்தரவிட்டுள்ளது லண்டன் வர்த்தக நீதிமன்றம்.

தங்களிடம் வாங்கியக் கடனை அனில் அம்பானி திரும்பச் செலுத்தாததையொட்டி, சம்பந்தப்பட்ட சீன வங்கிகள் லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்க‍ை விசாரித்த நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக பல்வேறு நிறுவனங்களிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், தனது நிறுவனம் திவாலானதாக அவர் சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், சீன வங்கிகள் தொடுத்த வழக்கை விசாரித்த லண்டன் வர்த்தக நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் டிபாசிட் தொகையை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனில் அம்பானி மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது.